டெல்லி: ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிக்கிறார். அப்போது; ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3வது ஏவுதளம் அமைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ரூ.3,706 கோடியில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எச்.சி.எல்., ஃபாக்ஸ்கான் கூட்டுடன் உத்தரப் பிரதேசத்தில் செமிகண்டக்டர் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் இதர கருவிகளுக்கான டிஸ்ப்ளே டிரைவர்கள் சிப்-கள் தயாரிக்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் அமையும் மையத்தில் மாதம் 3.6 கோடி சிப்-களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 5 செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் பணி முடியும் நிலையில் உள்ளது. மேலும் நாடு முழுவதும் அரிய கனிமவளத் திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார்.
The post ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.