திண்டுக்கல்: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒருமணி நேரமாக மழை பெய்து வருகிறது. ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், வட்டக்கானல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நாவினிபட்டி, கீழையூர், கீழவளவு, தும்பைபட்டி, தனியாமங்கலம், வல்லாளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பல்லடம் அடுத்த கோத்தனூர், சித்தம்பலம், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
The post தமிழ்நாட்டில் கொடைக்கானல், மேலூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஒருமணி நேரமாக மழை..!! appeared first on Dinakaran.