டெல்லி : பகல்ஹாம் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பகல்ஹாம் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, பொறுப்பற்ற முறையில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “இதுபோன்ற பொதுநல வழக்கு விசாரணை |அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். பஹல்காம் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவத்தின்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்,”என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
The post பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.