நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது: வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை!!

10 hours ago 2

சென்னை: வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது என வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

*வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது.

*விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது.

*போஸ்டர், பேனர் என விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும்.

*சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டாலும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை பாயும்.

*சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது: வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article