தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணை சரகம், சேலையூர் போக்குவரத்து போலீசார் சார்பில் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் கேம்ப் ரோடு சந்திப்பு பகுதியில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனை பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சுந்தர்ராஜன் நேற்று மாலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானம், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளிக்கரணை போக்குவரத்து ஆய்வாளர் பாண்டியன், சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ், உதவி ஆய்வாளர்கள் முருகன், நிஜானந்தம், மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.
The post போக்குவரத்து போலீஸ் சார்பில் தாம்பரத்தில் நீர் மோர் பந்தல்: உதவி ஆணையர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.