நெல்லையில் பாட்டியை தாக்கிய பேரன் கைது

1 day ago 3

திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு காவல் சரகம், செல்வி நகரில் தேவஆசீர்வாதம் மனைவி மேரிசெல்வபாய் என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று (16.04.2025) தனது பேரனுடன் தனது வீட்டில் இருந்த பொழுது, யாரோ மர்ம நபர் மேரிசெல்வபாயை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை திருடி சென்றதாக கூறப்பட்டது.

மேற்சொன்ன சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த சம்பவத்தில் காயம்பட்ட பெண்மணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். மேலும் காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க செயின் அந்த பெண்ணின் வீட்டிற்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மேற்சொன்ன சம்பவத்தில் பாட்டியுடன் வீட்டில் இருந்த பெரியசாமி மகனும், மேரிசெல்வபாயின் பேரனுமான சரண்பிரபு (வயது 21), தனது பாட்டியை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சரண்பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

Read Entire Article