நெல்லை, ஜன. 29: நெல்லையில் நாளை (30ம் தேதி) கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டத்திற்கு பிப்.6, 7ம் தேதிகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை (30ம் தேதி) மாலை 4 மணிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் கிரகாம் பெல் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தவறாது பங்கேற்று கருத்துக்களை வழங்க வேண்டும். இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
The post நெல்லையில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஆவுடையப்பன் தகவல் appeared first on Dinakaran.