
திருநெல்வேலி மாநகரம், பேட்டை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மனுதாரரான திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, தீன்நகரை சேர்ந்த ஜமாலுதீன் மகன் பஷீர்இப்ராகிம் (வயது 31) என்பவரும், பேட்டை மயிலப்பபுரம், நடுத்தெருவை சேர்ந்த சண்முகையா மகன் மாடசாமி(எ) மதன்(24) என்பவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சம்பளம் சரிவர தராததால் பஷீர்இப்ராகிம் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உடன் பணிபுரிந்த மாடசாமி(எ) மதன் பஷீர்இப்ராகிமை மீண்டும் வேலைக்கு தொலைபேசியில் அழைத்தபோது, அழைப்பை ஏற்காததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்ந நிலையில் நேற்று முன்தினம் (7.5.2025) பேட்டை ஐ.டி.ஐ. பேருந்து நிறுத்தம் அருகே பஷீர்இப்ராகிம் நடந்து சென்ற போது வழிமறித்து போன் போட்டால் எடுக்க மாட்டியா என்று மாடசாமி அசிங்கமாக பேசியதோடு, மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பஷீர்இப்ராகிம் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாடசாமி(எ) மதனை கைது செய்து விசாரணை செய்தனர்.