
திருநெல்வேலி மாநகரம், சி.என்.கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன் ஸ்ரீதர் (தம்பி) (வயது 66) என்பவருக்கும் அதே தெருவில் வசித்து வரும் வீரபாகு மகன் ஆவுடைநாயகம் (அண்ணன்) (68) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (2.5.2025) குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொண்ட போது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் கொடுத்த புகாரில் ஆவுடைநாயகம் மகன்களான வீரராகவன், கணபதிராமன் மற்றும் ஆவுடைநாயகம், ஆவுடைநாயகம் மனைவி கோமு ஆகிய 4 பேர் மீதும் சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கோமு கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீதர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி கொடுத்த புகாரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.