
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இதற்காக கிராம உதவியாளர் ராசையா ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் செய்த நபர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, கிராம உதவியாளர் ராசையா லஞ்சப் பணத்தை பெற்ற போது, அவரை கையும்,களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.