
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பலந்தசாஹர் மாவட்டம் ரசோல்பூர் கிராமத்தில் இன்று காலை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, ஓவரின் கடைசி பந்து வீசுவதில் நண்பர்களான விஜேஷ், சக்தி (வயது 18) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜேஷ் கிரிக்கெட் பேட்டால் சக்தியின் தலையில் சரமாகியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சக்தியை மீட்ட சக இளைஞர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், பேட்டால் தாக்கியதில் படுகாயமடைந்த சக்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்தியை அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய விஜேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.