நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 100 கிராம் பறிமுதல்

4 days ago 2

நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நிஜல்சன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்புவிளை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திசையன்விளை, உடன்குடி ரோடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (வயது 19) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 100 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் திசையன்விளை காவல் நிலையம் அழைத்து வந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகளை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லோகேஷை நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

Read Entire Article