
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காலாஞ்சிமேடு பகுதியில் சந்தோஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சந்தோசிடம் லிப்ட் கேட்டுள்ளார். சந்தோசும் அந்த நபருக்கு லிப்ட் கொடுத்துள்ளார்.
அவரை அழைத்துக்கொண்டு சென்ற சிறிது தூரத்தில் அங்கிருந்த நான்கு பேர், சந்தோஷை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் செல்போன் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.