நெல்லை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 weeks ago 5

நெல்லை,

இந்தியாவின் 76-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை ரெயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நெல்லை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது. 

Read Entire Article