
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை நகர காவல் சட்டம், 1997-ன் பிரிவு 41(2) இன் கீழ் 7.7.2025 அன்று காலை 00.00 மணி (நள்ளிரவு 12 மணி) முதல் 21.7.2025 அன்று இரவு 24.00 மணி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் பொது அமைதி அல்லது பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.