நெல்லை: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

2 months ago 11

நெல்லை,

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீற் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனத்தில் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 06.11.2024 முதல் 31.03.2025 முடிய 146 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம். தெற்கு பாப்பான்குளம். கீழ்முகம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் உள்ள 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article