
நெல்லை மாவட்டம், திசையன்விளை, விஜயஅச்சம்பாடு, மேல தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) தம்பியான கனகராஜ் அதே ஊரைச் சேர்ந்த சுந்தர்(50) என்பவரிடம் கடனாக ரூ.300 வாங்கி திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் 8.5.2025 அன்று சுரேஷ்குமார் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சுந்தர், சுரேஷ்குமாரிடம் உன் தம்பி வாங்கிய பணத்தை திருப்பி கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ்குமார் பிறகு தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், சுரேஷ்குமாரை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ்குமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுந்தரை நேற்று (9.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.