
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். 4 ஆயிரம் வகைகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வண்ண ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை, டால்பின், முத்து, சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன் போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், வண்ண, வண்ண ரோஜா மலர்கள் கொண்டு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோஜா கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.