நெல்லை, தூத்துக்குடியில் கனமழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

1 month ago 5

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தச்சநல்லூர், கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மற்றும் கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கனமழை காராணமாக முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குள் உள்ள அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது. இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவதியடைந்தனர்.

மேலும் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தை சுற்றி மழைநீர் தேங்கியதோடு, காவல் நிலையத்திற்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Read Entire Article