
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் காவல் துறையினர் நேற்று (1.5.2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளை, மகாராஜாநகரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் கணேஷ்குமார் (வயது 30) என்பவரிடமிருந்து போலீசார் 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (1.05.2025) பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேலப்பாளையம் வீரமாணிக்கப்புரம் மேலத்தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் சந்திரபாபு(எ) பாபு(41) என்பவரிடம் விசாரணை செய்து, சோதனை செய்ததில் அவரிடமிருந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய 720 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.