நெல்லியாளம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு காண கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

1 week ago 2

 

பந்தலூர்: நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் முனியப்பன் முன்னிலை வகித்தார். கோடைக்காலம் துவங்கியுள்ளதால் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சீரான குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் எனவும், பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. அதற்கு போதிய பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் முறையாக அகற்ற வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் விவாதித்தனர். தொடர்ந்து நகர்மன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக வாசிக்கப்பட்ட ஆறு தீர்மானங்களுக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர். குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் உறுதியளித்தனர். இந்த கூட்டத்தில் துணை தலைவர் நாகராஜ் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கவுன்சிலர் சீலா நன்றி கூறினார்.

The post நெல்லியாளம் நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு காண கவுன்சிலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article