
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறை இனி 4 முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை சாவடிகளில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.