அமெரிக்காவில் 300 பேர் பயணித்த விமானத்தில் திடீர் தீ விபத்து

8 hours ago 2

புளோரிடா,

புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து பயணிகளை டெல்டா விமானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விமானத்திலிருந்து அவசர சறுக்குகளில் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயல்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான வீடியே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article