புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டு கட்டாக பணம் எரிந்து நிலை இருந்தவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததன் பெயரில் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அரசியல் ரீதியாகவும் இவ்விவகாரம் பேசு பொருளானது. இதையடுத்து நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம், இமாச்சல் உயர்நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் தலைமை நீதிபதிகள் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு அமைத்து இருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவானது டெல்லியில் உள்ள அரியானா விருந்தினர் மாளிகையில் தங்கி, டெல்லி காவல்துறை ஆணையர் ,ஒன்றிய இணைப்பு துறையின் தலைமை அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்கள் சேகரிக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய ஆய்வு அறிக்கையை நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம், மேற்கண்ட நீதிபதிகள் கொண்ட குழு சீலிடப்பட்ட கவரில் வழங்கி உள்ளது.
The post நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.