திருச்சியில் பணம் பறித்த 4 பேர் கைது

5 hours ago 4

 

திருச்சி, மே 6: திருச்சியில் வாலிபரிடம் பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி ரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(49). இவர் கடந்த 3ம் தேதி திருவானைக்காவல் மயானம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள், ரவிச்சந்திரனிடம் ரூ.2000 கேட்டு தகராறு செய்தனர்.
இதற்கு மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அருண்குமார்(23) மற்றும் தனுஷ்(21), பிரசன்னா(24), அரவிந்தன்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரூ.2000 மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருச்சியில் பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article