திருச்சி, மே 6: தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை வளர்த்தெடுப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்கவும், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்லும் திறன் படைத்த வீரர்களை உருவாக்கும் விதமாக அனைத்து விளையாட்டுக்களுக்கும் தனிப்பட்ட பிரத்யேக விளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள் மாவட்டம் தோறும் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டங்கள் தோறும் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருச்சி எலந்தைபட்டியில் 47 ஏக்கர் பரப்பளவில், ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் விளையாட்டுக்களான தடகளம், நீச்சல், ஹாக்கி, பகால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவதற்கும், பயிற்சி மேற்கொள்ளவும் சர்வதே தரத்திலான ஒலிம்பிக் அரங்கம் ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. மாநில அரசும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக ஏராளமான நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறது.
The post திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிக்கு தனி அரங்கம் appeared first on Dinakaran.