நீண்டகால காதலியை கரம் பிடித்த பிரபல பாடகர் அர்மான் மாலிக்

4 months ago 13

புதுடெல்லி,

பாலிவுட்டில் பிரபல பாடகராக இருப்பவர் அர்மான் மாலிக் (வயது 29). இவருடைய காதலி ஆஷ்னா ஷெராப். இந்த ஜோடி 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். ஷெராப், பேஷன் தொடர்பான பல்வேறு தகவல்களை சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இந்த ஜோடிக்கு 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது, காதலி ஷெராப்புக்காக, கசம் சே: தி புரொபசல் என்ற இசை வீடியோ ஒன்றை மாலிக் வெளியிட்டார்.

இதற்கு 2 மாதங்கள் கழித்து அதிகாரப்பூர்வ முறையில் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். இந்நிலையில், பாடகர் அர்மான் மாலிக் தன்னுடைய நீண்டகால காதலியை கரம் பிடித்துள்ளார். இதனை தம்பதியாக அவர்கள் இருவரும் இன்று இன்ஸ்டாகிராம் வழியே அறிவித்துள்ளனர். து ஹி மேரா கர் என பதிவை வெளியிட்டு, திருமண புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

Read Entire Article