நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு ரூ25 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கினார்

1 week ago 4


ஊத்துக்கோட்டை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற, பேரிட்டிவாக்கத்தைச் சேர்ந்த மாணவிக்கு 3வது வருடமாக ரூ25 ஆயிரத்திற்கான காசோலையை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களது மகள் லாவண்யா போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து, 2022ம் வருடம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில அனுமதி பெற்றார்.

இதனையறிந்த, கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் லாவண்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று தனது சொந்த பணம் ரூ25 ஆயிரத்திற்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கி மாணவி லாவண்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 3வது வருடமாக மாணவி லாவண்யாவிற்கு ரூ25 ஆயிரத்திற்கான காசோலையை எம்எல்ஏ வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின்போது, மாவட்ட பொருளாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் தில்லைகுமார், மாவட்ட அமைப்பு சார் ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் விஜயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு ரூ25 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article