மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,719-ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 4,521 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் நீடிக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
The post நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்.. 2,000ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!! appeared first on Dinakaran.