கேள்வி நேரத்தின் போது பழனி ஐ.பி.செந்தில்குமார் (திமுக) பேசுகையில், “கொடைக்கானல், மிகவும் கடும் போக்குவரத்து நெருக்கடியில் இருக்கிறது. மாற்றுவழிப் பாதை உருவாக்குவதற்கான ஆய்வுகள் என்ன நிலையில் இருக்கிறது” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,‘‘கொடைக்கானலில் சீசனில் பார்த்தீர்கள் என்றால், வண்டிகள் உள்ளே செல்வதற்கு பலமணி நேரம் ஆகிறது. ஏற்கனவே இதே சட்டமன்றத்தில் பல நேரங்களில் எதிர்கட்சியாக இருக்கின்றபோதிலும், உறுப்பினர் செந்தில்குமார் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.
தற்போது நம்முடைய அரசாங்கத்தின் மூலமாக பொறியாளர்களை அழைத்து, இந்த ஆண்டே அது குறித்து விரிவான திட்ட அறிக்கை தேவை என்று தெரிவித்து, அதற்கு முக்கியத்துவம் தந்து, தற்போது அப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முழுமையடைந்தவுடனே முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு சென்று, எவ்வளவு ரூபாய் தேவைப்படுமோ, அதற்கு இசைவு பெற்று, அதற்கு இந்த ஆண்டே முக்கியத்துவம் தரப்படும்” என்றார்.
The post கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.