சட்டப்பேரவையில் நேற்று நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கன்னியாகுமரி தளவாய்சுந்தரம் (அதிமுக) பேசியதாவது: பல இடங்களில் வக்கீல்கள் கொலை செய்யப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர். எனவே, வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும். எங்கு நீதிமன்றம் தொடங்க வேண்டும், எங்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதை உயர் நீதிமன்ற பதிவாளர் தான் முடிவு செய்கிறார். இந்த விவகாரத்தில் அரசுக்கான அதிகாரம் பறிபோகிறது.
* அமைச்சர் ரகுபதி: எங்கு நீதிமன்றம் தொடங்க வேண்டும், எங்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதை வக்கீல்கள் சங்கம் அளிக்கும் கோரிக்கைக்கு தகுந்தாற்போல் உயர் நீதிமன்றம் முடிவெடுத்து அரசுக்கு அனுப்புகிறார்கள். அரசு அதற்கான நிதியை ஒதுக்குகிறது. எந்த பகுதியில் கோர்ட் அமைக்கப்பட வேண்டும் என்பதை பரிசீலனை செய்கிற உரிமை நமக்கு உள்ளது.
* தளவாய்சுந்தரம்: கேரளா, மகாராஷ்டிரா மும்பையில் இதுபோன்ற நடைமுறை கிடையாது. நீதிமன்றமே இந்த அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
* அமைச்சர் ரகுபதி: இந்த அதிகாரத்தை நீதிமன்றமே எடுத்துக்கொண்டது என்றால் அதை விட்டது நீங்கள் தான். நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம் கோரிக்கை வக்கீல்கள் பாதுகாப்பு சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் appeared first on Dinakaran.