
சென்னை,
சூரியுடன் நடிக்க ஓகே வா என்று பல பேர் தன்னிடம் கேட்டதாக ஐஸ்வர்யா லட்சுமி கூறினார்.
பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமான இவர், 'ஜெகமே தந்திரம், 'பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2', கட்டா குஷ்தி' உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது சூரியுடன் இணைந்து 'மாமன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,
'என்னிடம் நிறைய பேர் இந்த கேள்வியை கேட்டார்கள். உங்களுக்கு சூரி சாருடன் நடிக்க ஓகே வா என்று. ஏன் அப்படி கேட்டார்கள் என்று தெரியவில்லை. சூரி சார் மாதிரி ஒருவருடன் நடிப்பது எனக்கு பெரிய பெருமை. ஏனென்றால் அவ்வளவு பெரிய உயரத்தில் அவர் இருக்கிறார்.
நீங்கள் எந்த சூப்பர் ஸ்டார் வேண்டுமாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு இணையான உயரத்தில் சூரி சார் இருக்கிறார். அவர் அவ்வளவு நேர்மையான மனிதர். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும், மரியாதையும் இருக்கும்' என்றார்.