நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டுகிறார் - கணவர் மீது பெண் போலீசில் புகார்

5 hours ago 2

மதுரவாயல் அடுத்த வானகரம் நூம்பல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 26 வயதுடைய வாலிபரும், பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் 28 வயதுடைய பெண்ணும் கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வானகரம் போலீசில் அந்த பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கணவன், மனைவியான நாங்கள் இருவரும் குன்னூருக்கு இன்ப சுற்றுலா சென்றோம். அப்போது அங்குள்ள விடுதியில் தங்கி இருந்த நிலையில், தன்னை மிரட்டி நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்ட எனது கணவர் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் விடப்போவதாக மிரட்டுகிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article