
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பரபரப்பு நிறைந்த எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கண்களை மூடி கொண்டனர். ஆனால், அவர் பதற்றமின்றி நடந்து சென்று விட்டு, திரும்புகிறார்.
அதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், அந்த பெண் நடைப்பயிற்சி செல்வது போல் சிறிது தூரம் மெல்ல நடந்து சென்று விட்டு, பின்னர் அந்த வழியிலேயே திரும்பி வருகிறார்.
இந்த சம்பவம், பாய்ஸ் என்ற தமிழ் படத்தில் வரும் காட்சிகளை நினைவுப்படுத்துகிறது என ஒருவர் பதிவிட்டு உள்ளார். அந்த படத்தில் வருவது போன்று ஏதேனும் பந்தயம் கட்டினாரா? ஏனெனில் சில விநாடிகளில் அவர் திரும்பி விடுகிறார் என வீடியோவில் விமர்சனங்களை வெளியிட்ட மற்றொரு நபர் பதிவிட்டு உள்ளார்.
பெண்களுக்கான அதிகாரமளித்தலை நான் தற்போது நேசிக்கிறேன் என ஒருவரும் அவர் உடல், அவர் உரிமை. அதனால் விரும்பியவற்றை அவர் செய்யலாம். அவரை திட்டாதீர்கள் என்று மற்றொருவரும் பதிவிட்டு உள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்றும் பிரபலமடைவதற்காக இப்படி செய்கிறாரா? என்றும் சிலர் கேட்டுள்ளனர்.
அவரே விரும்பி செல்கிறார். பின்னர் ஏன் வீடியோவில் காட்சியை மறைத்து எங்களுக்கு வெளியிடுகிறீர்கள்? என ஒருவர் கேட்டுள்ளார்.
அதில் ஒருவர், மனித உடலுக்கு தூய்மையான காற்று தேவை. அது வேதம் சார்ந்த அறிவியல். நம்முடைய பழமையான அறிவுக்கு என்னவாகி விட்டது. நிர்வாண உடலை நாம் ஏன் பாலியல் நோக்கில் பார்க்க வேண்டும்? என கேட்டுள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் நிறைய சுதந்திரம் கொடுத்து வளர்த்துள்ளனர் என்றும் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.