'சூர்யா 46' - படப்பிடிப்புக்கு முன்பே விற்கப்பட்ட ஓடிடி உரிமம்...இத்தனை கோடிக்கா?

3 hours ago 2

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ஓடிடி உரிமம் விறகப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 85 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி படக்குழுவினரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Read Entire Article