மதுரை : நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது. நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. கடந்த 2023ம் ஆண்டு நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோ மேக்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது. நியோமேக்ஸ் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது ED சொத்துகளை முடக்கியது.
The post நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் appeared first on Dinakaran.