தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவு

1 week ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிரு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 105.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக ஈரோட்டில் 104 டிகிரி, திருச்சியில் 102.38 டிகிரி, திருத்தணியில் 102.2 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 100.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தஞ்சை, மதுரை, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 100.4 டிகிரி மற்றும் நாகையில் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article