நிதிஷ் ராணா அதிரடி.. சென்னைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

1 month ago 5

கவுகாத்தி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரியான் பராக் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த நிதிஷ் ராணா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் சென்னை பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி ராஜஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். துருவ் ஜுரெல் 3 ரன்களிலும், ஹசரங்கா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடி வந்த ரியான் பராக் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்துள்ளது. சென்னை தரப்பில் பதிரனா, கலீல் அகமது, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி சென்னை களமிறங்க உள்ளது. 

Read Entire Article