நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு

3 days ago 2

டெல்லி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன. கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று டெல்லியில் மத்திய நிதி மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார். முன்னதாக நேற்று அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article