அமெரிக்கா: வீட்டில் நடந்த இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

2 days ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இன்று இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இரவு 12 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தினான். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article