கோடை விடுமுறையை இனிமையாக்கும் துபாய் சுற்றுலா

2 days ago 3

அந்த வகையில் மனதிற்கு இனிய முறையிலும், மயிர் கூச்செறியும் அனுபவங்களோடு விதவிதமான வாட்டர் தீம் பார்க்குகள் அமைந்துள்ள துபாய்க்கு குழந்தைகளுடன் கோடைகாலச் சுற்றுலா செல்வது மறக்க முடியாத அனுபவமாக அமையும்

குழந்தைகளின் மனம் கவரும் வகையிலும், குடும்பத்தினர் அனைவருக்கும் விருப்பமான முறையில், அனைத்து வயதினரும் விரும்பும் வகையிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாகவும் கண்களையும், மனதையும் வசீகரிக்கும் வகையில் துபாய் பெருநகரில் ஏராளமான கேளிக்கை அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அன்றாட வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை மறந்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக, வியப்பூட்டும் அனுபவங்களை ஏற்படுத்தும் வகையிலும், மறக்க முடியாத கோடைகால அனுபவத்தை பெரும் வகையிலும் துபாய் வாட்டர் தீம் பார்க் சுற்றுலா மற்றும் இதர கேளிக்கை அனுபவங்கள் அமையும். அவ்வகையில் சுற்றுலா ஆர்வத்தை தூண்டும் துபாயில் அமைந்துள்ள தனித்துவமான, வசீகரிக்கும் பல்வேறு வாட்டர் தீம் பார்க்குகள், இதர சுற்றுலா தளங்கள், உள்ளரங்க விளையாட்டுகள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

AQUAVENTURE வாட்டர் பார்க்

துபாயில் உள்ள Atlantis The Palm என்ற இடத்தில் அமைந்துள்ள உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அனுபவங்களை தரக்கூடிய குளங்கள் மற்றும் செயற்கை ஆறுகள் அனைத்து வயதினரையும் கவரக்கூடிய தன்மை பெற்றுள்ளது. அங்கு உள்ள அதிவேக ஸ்லைடு மூலம் மேலிருந்து கீழாக சறுக்கி விளையாடுவதில் வயது வித்தியாசங்களை பாராமல் அனைவரும் ஈடுபட விரும்புவார்கள். அந்த வகையில் அக்குவாகோண்டா என்ற பெயரில் உலகத்திலேயே மிகவும் பெரிதான வாட்டர் ஸ்லைடு அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர்வாழ் உயிரினங்களை அருகிலேயே கண்டு மகிழும் வகையில் ஷார்க் லகூன் என்ற கடலடி பார்வை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு சுவாரசியங்கள் நிறைந்த வாட்டர் பார்க் அக்வாவென்ச்சர் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும் தகவல்களை அறிய https://www.aquaventureworld.com/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

DXB இண்டோர் விளையாட்டுக்கள்

துபாயில் உள்ள Dubai Mall என்ற மாபெரும் வளாகத்திற்குள் அமைந்துள்ள DXB என்ற உள்ளரங்க கேளிக்கை விளையாட்டு மையம் அனைத்து தரப்பினரையும் வயது வித்தியாசம் இல்லாமல் சாகச விளையாட்டுகளில் ஈடுபட வைக்கும் இடமாக அமைந்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற மெய்நிகர் அனுபவங்கள் மூலம் சாகசங்களை உணரும் விளையாட்டுக்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ரசனையோடு விளையாடும் அதே நேரத்தில் நம்முடைய அறிவை தூண்டும் வகையிலும் புதிர் விளையாட்டுகள் அங்கு ஏராளமாக இருக்கின்றன. கேளிக்கை அனுபவத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனதின் புத்தாக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் அந்த விளையாட்டுக்கள் அமைந்து இனிய சுற்றுலாவாக அந்த அனுபவங்கள் அமையும். இது குறித்த மேலும் தகவல்களை அறிய இணையதளத்தை https://thedubaimall.com/en/entertain-detail/vr-park அணுகலாம்.

IMG அட்வெஞ்சர்

 உலகம் என்ற துபாயில் உள்ள அரேபியா நகரில் அமைந்துள்ள IMG Worlds of Adventure என்ற துபாயின் மாபெரும் உள்ளரங்க தீம் பார்க் ஆறுவிதமான மயிர் கூச்செறியும் அரங்கங்களை கொண்டுள்ளது. அவை மார்வல், லாஸ்ட் வேலி, கார்ட்டூன் நெட்வொர்க், IMG Boulevard, The Haunted Hotel, and IMG Kids Zone ஆகியவையாகும். இதில் உள்ள ரோலர் கோஸ்டரில் பயணிக்கும் அனுபவம் என்பது எந்த காலத்திலும் மறக்க முடியாத மயிர்க்கூச்செறியும் அனுபவமாக அமையும்.

 

அத்துடன் விதவிதமான விளையாட்டுக்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உயர் தொழில்நுட்பத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மிகச்சிறந்த கேளிக்கை அனுபவத்தை துபாயில் உள்ள இந்த பகுதியில் பெற முடியும் என்பது இதன் சிறப்பாகும். மேலும் விபரங்களை அறிய விரும்புபவர்கள் https://www.imgworlds.com/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

ஹவுஸ் ஆப் HYPE

துபாயில் உள்ள Dubai Mall என்ற மாபெரும் வளாகத்திற்குள் அமைந்துள்ள House of Hype என்ற உள்ளரங்க கேளிக்கை விளையாட்டு மையம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் விளையாட்டுக்கள் மட்டும் அல்லாமல் இசை மற்றும் பல்வேறு கலை வடிவங்களின் கேளிக்கை மையமாகவும் அமைந்திருக்கிறது. அங்குள்ள 100- க்கும் மேற்பட்ட விதவிதமான தனிப்பட்ட கேளிக்கை அனுபவங்களை 18 இடங்களில் அமைந்துள்ள பிளே கேம்ஸ் மூலம் பெற முடியும்.

அத்து மட்டுமல்லாமல் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தனி நபர்கள் விளையாடும் பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் டிஜிட்டல் முறையிலும் நேரடியாக ஒருவர் பங்கு பெறும் வகையிலும் விதவிதமான விளையாட்டுக்கள் புதிய அனுபவங்களை பார்வையாளருக்கு வழங்குகின்றன. மறக்க முடியாத அனுபவமாக அமையும் இப்பகுதி அனைத்து தரப்பினரையும் கவர்வதாக இருக்கிறது. மேலும் இது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் https://www.house-of-hype.com/en/dxb என்ற இணையதளத்தை அணுகலாம்

பனிசூழ்ந்த SKI DUBAI பார்க்

துபாயில் உள்ள Mall of the Emirates என்ற இடத்தில் உயர் தொழில் நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள Ski Dubai என்ற கேளிக்கை பூங்கா துருவப் பகுதிகளில் பெறக்கூடிய அனுபவத்தை துபாயில் அளிக்கிறது. அந்த வகையில் வகையில் பனி சூழ்ந்த குளிர்கால அதிசயமாக அந்த இடம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. வயது வித்தியாசம் பாராமல் அங்குள்ள பணிகளில் அனைவரும் சறுக்கி விளையாடலாம். பனி பரவிய தரைத்தளங்களில் உருண்டு புரண்டு உள்ளம் மகிழலாம் துருவப்பிரதேசத்தின் கொட்டும் பனி அனுபவத்தை ஏற்படுத்தும் அந்த பகுதியில் பென்குயின்கள் நடமாடுவதையும் கண்டு அதிசயக்கலாம். விருப்பமுள்ளவர்கள் திரில்லிங்கான அனுபவத்தை ஏற்படுத்தும் toboggan ride செல்லலாம்.

 

Ski Dubai பனி பார்க் துபாயின் வெப்பத்தை மறந்து துருவப் பகுதிகளில் உள்ள பனி சூழ்ந்த சூழ்நிலையை அனுபவிக்கச் செய்யும் புதுமையான அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு அமைவது உறுதி. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் https://www.skidxb.com/en-ae/ski-dubai 660 TM என்ற இணையதளத்தை அணுகலாம்

விண்ணைத்தொடும் துபாய் SKY VIEWS

துபாயில் அமைந்துள்ள Sky Views Observatory என்ற இடம் விண்ணிலிருந்து துபாய் பெருநகரப் பரப்பை வானத்திலிருந்து கண்டுகளிக்கும் அனுபவத்தை தருகிறது. அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி. துபாய் பெருநகரத்தை 360 டிகிரி கழுகு பார்வை மூலமாக விண்ணில் உயரமான இடத்திலிருந்து கண்டுகளிப்பதற்கு மிகச் சிறந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான Burj Khalifa உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மிகவும் அருகில் இருந்து பார்க்கக்கூடிய அனுபவத்தை பெற முடிகிறது இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு தலைசுற்றும் உயரத்தில் அமைந்துள்ள விண்ணை தொடும் கட்டிடங்களின் உச்சியில் நடந்து செல்லும் மயிர் கூச்செறியும் அனுபவத்தை பெறும் வாய்ப்பையும் அங்கு பெற முடியும். அந்த வகையில் மறக்க முடியாத பயணமாகவும் இந்த சுற்றுலா அமையும் என்பது உறுதி. இது குறித்த மேலும் தகவல்களை பெற விரும்புபவர்கள் https://www.skyviewsdubai.com/edge-walk/ என்ற இணையதளத்தை அணுகவும்.

Read Entire Article