கோவை: மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடத்தும் மக்கள் சேவை மையம் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம், கோவை ராமநாதபுரம் பகுதியில் இன்று நடந்தது.