நாளை வெளியாகும் 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர்

1 day ago 3

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வின்னர் படத்தின் கைப்புள்ள, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் மறுப்பக்கம் படத்தின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.

இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதாவது, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

"கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. 

The OGs are bringing madness, mischief, and laughter with the #GangersTrailerServing HOT tomorrow, Stay tuned for the EPIC Reunion ‼#GangersFromApril24 #SundarC #Vadivelu @khushsundar #AnanditaSundar @benzzmedia #CatherineTresa pic.twitter.com/FpRcXc6sIG

— Avni Cinemax (@AvniCinemax_) March 31, 2025
Read Entire Article