நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு

2 hours ago 2

சென்னை,

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக விவாதிக்க நாளை (மாா்ச் 5ம் தேதி) நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக அரசு 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

மாநிலத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ள நிலையில், மாநிலத்தின் உரிமைக்காக, அரசியல் கட்சிகள் கவுரவம் பார்க்காமல் இதில் பங்கேற்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறி இருந்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article