
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம், அரசியல் கட்சி துவங்கி இருக்கும் விஜய் மத்திய, மாநில அரசுகளை மறைமுகமாக விமர்சிக்கிறார் என்றும், அவரின் அரசியல் பார்வையை எப்படி பார்க்கிறீர்கள் என்றும் கேட்கப்பட்டது. அதற்கு விஷால் பதிலளிக்கையில்,
'முதலில் அவர் செய்தியாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். அவரிடம்தானே கேட்க வேண்டும். விஜய் இன்னும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவர் சந்தித்தபின்பு உங்கள் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்து விடும் ' என்றார்.