நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம்

6 months ago 24

மதுரை,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நமசிவாயம் என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பஸ்சை பணிமனையில் இருந்து சோழவந்தான் பஸ்நிலையத்துக்கு ஓட்டி வந்தார். அப்போது ஒரு நாய் மீது பஸ் மோதிவிட்டது. இதில் நாய் கால் முறிந்தது. ஆனால், அந்த பஸ் நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த வக்கீல் ஒருவர் பணிமனைக்கு புகார் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை செய்த பணிமனை நிர்வாகம், புகார் உண்மை என தெரியவந்ததால், அடிபட்ட நாயை சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல், பணியில் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக டிரைவர் நமசிவாயத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Read Entire Article