மும்பை: மின்சார ரெயிலில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி

3 hours ago 5

மும்பை,

மும்பையில் மின்சார ரெயில் சேவை நகரின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 75 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். மின்சார ரெயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலாக இருப்பதால் மின்சார ரெயில்களில் 3, 12-வது பெட்டிகளில் முதியவர்களுக்கு என 14 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் கூட்ட நெரிசல் காரணமாக முதியவர்கள் அவர்களுக்கான இருக்கைகளில் சென்று உட்காருவதில் சிக்கல் உள்ளது. இந்தநிலையில் மத்திய ரெயில்வே மின்சார ரெயிலில் முதியவர்களுக்கு என தனிப்பெட்டியை அறிமுகம் செய்து உள்ளது. இது குறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மின்சார ரெயிலின் மையப்பகுதியில் உள்ள லக்கேஜ் பெட்டி, முதியவர்களுக்கான பெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் முதியவர்கள் எளிதில் மின்சார ரெயிலில் ஏறி, இறங்க முடியும். முதியவர்களுக்கான பெட்டியில் 13 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல அனைத்து மின்சார ரெயில்களிலும் முதியவர்களுக்கு தனிப்பெட்டி அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article