நாமக்கல், மே 5: அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில், நாமக்கல் மாவட்டத்தில் 102 டிகிரி வெப்பம் வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெப்பம் வீசி வருகிறது. பகலில் வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் துவங்கியது. வரும் 28ம்தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கிறது. நேற்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 102 டிகிரி வெப்பம் நிலவியதால் குழந்தைகள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அனல்காற்று வீசியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
The post நாமக்கல்லில் 102 டிகிரி வெப்பம் appeared first on Dinakaran.