
கோவை,
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து சீமான் பேசியதாவது;
"என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு. வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?
ஆதாயம் இருக்குமென்றால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள். எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டுமென்றே இவ்வளவு நாள் நான் போராடினேன்.
மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது. எப்படியாவது இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள்."
இவ்வாறு அவர் கூறினார்.