மணிரத்னத்தின் புதிய பட அப்டேட்

3 hours ago 2

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

'தக் லைப்' படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் நவீன் பொலிஷெட்டி தெலுங்கில் ஜதி ரத்னலு, ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானார். 'தக் லைப்' படம் வெளியானதும் நவீன் பொலிஷெட்டி நடிக்கவுள்ள படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நவீன காதல் கதையாக உருவாகும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகவும் நாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரியவுள்ளார்.

Read Entire Article